உலகம்

AI பொலிஸை களமிறக்கிய தாய்லாந்து!

தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்து பொலிஸ் முதன்முறையாக தனது முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அந்த இயந்திர மனிதன் பணியமர்த்தப்பட்டுள்ளது. இயந்திர மனிதனில் 360 டிகிரியிலும் செயல்படவல்ல திறன்மிகு படக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புப் படக்கருவிகள் மூலம் பெறப்படும் நேரடிக் காணொளிகளையும் ஆளில்லா வானூர்திக் கண்காணிப்புக் காணொளிகளையும் சைபோர்க் ஒருங்கிணைக்கும். பின்னர் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை அது செயல்முறைக்கு உள்ளாக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…