உலகம்

எலான் மஸ்க் உடன் இந்தியப் பிரதமர் பேச்சு!

எலான் மஸ்க் உடன் தொலைபேசியதாகவும் அப்போது தொழிநுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பில் இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தோம் எனவும் இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

பல்வேறு விடயங்கள் குறித்து எலான் மஸ்க் உடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த வருட தொடக்கத்தில் அமெரிக்கா சென்றிருந்தபோது, எலான் மஸ்க் உடன் நடைபெற்ற ஆலோசனையின் போது பேசப்பட்ட அம்சங்களும் இதில் அடங்கும். தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறைகளில் ஒத்துழைப்புக்கான மகத்தான சாத்தியக் கூறுகள் பற்றி நாங்கள் விவாதித்தோம்.

இந்த துறைகளில் அமெரிக்காவுடனான கூட்டாண்மைகளை மேம்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக உள்ளது என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…