உலகம்

கொலம்பியாவில் அவசர நிலை பிரகடனம்!

தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கம் முதல் மஞ்சள் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இது ஏடிஸ் மற்றும் ஹேமகோகஸ் வகை கொசுக்களால் பரவும் ஒருவகை வைரஸ் நோய் ஆகும். இதுவரை இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 74 பேரில் 34 பேர் உயிரிழந்தனர்.

அங்குள்ள டோலிமா பிராந்தியத்தில் 22 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மஞ்சள் காய்ச்சலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டில் இந்த சமயத்தில் பல கொலம்பியர்கள் வெப்பமான பகுதிகளுக்குச் செல்கிறார்கள். அங்கு நோயைப் பரப்பும் கொசுக்கள் அதிகமாக உள்ளன.

அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்குச் செல்பவர்கள் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கில்லர்மோ அல்போன்சோ ஜராமில்லோ கூறினார். இலவசமாக வழங்கப்படும் இந்த தடுப்பூசியைப் மக்கள் செலுத்திக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…