கனடா

டொராண்டோவில் எரிபொருள் விலை உயர்வு

 கனடாவின் டொராண்டோ பெரும்பாக பகுதியில் எரிபொருள் விலைகள் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக எரிபொருள் விலை ஆய்வாளர் டேன் மெக்டியாகு தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை ஒரு லிட்டருக்கு 5 சென்ட் அதிகரித்து, பெட்ரோல் விலை 182.9 சென்ட் ஆகியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வியாழக்கிழமை ஓன்றாரியோ மாகாணத்தின் தெற்கு, மத்திய மற்றும் தென்மேற்கு பகுதிகளிலும், குறிப்பாக கிரேட்டர் டொராண்டோ பகுதியில், விலை மேலும் 2 சென்ட் உயரக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உயர்வு, 2022 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் திகதிக்குப் பின்னர் பதிவாகும் அதிகபட்ச விலையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், பெட்ரோல் விலைகள் உயர்ந்து கொண்டிருக்கையில், டீசல் விலைகள் புதன்கிழமை குறைந்ததுடன், வியாழக்கிழமை மேலும் ஒரு லிட்டருக்கு 7 சென்ட் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…