No products in the cart.
கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்ட நபருக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை
கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்துள்ளது.
குறித்த நபர் ஐந்து பெண்களுக்கு எதிராக 6 பாலியல் வன்முறைகள் செய்ததாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டதுடன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஜோயல் எரிக் கார்ல்சன் என்பவர், 10 ஆண்டுகள் 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பிய உயர்நீதிமன்றத்தில் கேம்லூப்ஸ் நகரில் வழங்கப்பட்டது.
கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்ட நபருக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை | Bc Man Sentenced For Very Serious Sexual Offences
இது மிகவும் கொடூரமான பாலியல் குற்றமாகும் என நீதியரசர் டபிள்யூ. பால் ரிலி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நபரின் செயல், ஒவ்வொரு பாதிக்கப்பட்ட பெண்ணும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 முதல் 2018 வரை தொடர்ச்சியாக இந்த வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.