No products in the cart.
பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று நிறைவு பெறுகிறது
அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அவ்வாறு ஆரம்பிக்கப்படும் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் 2026.07.24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.














