உலகம்

வெற்றிகரமாக பூமி திரும்பிய ஆர்டெமிஸ் – 02 குழு

Artemis II விண்வெளி பயணத்தை மேற்கொண்ட விண்வெளி வீரர்கள், ஒன்பது நாள் வரலாற்றுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.

பசிபிக் பெருங்கடலில் அதிகாலை தரையிறங்கிய இந்தக் குழுவினர், பாதுகாப்பாக உள்ளதாக தளபதி Reid Wiseman உறுதிப்படுத்தினார்.

இந்தப் பயணம் மனித விண்வெளி ஆய்வில் புதிய கட்டத்தை தொடங்குவதாக NASA தெரிவித்துள்ளது. நான்கு விண்வெளி வீரர்களும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் இதுவரை பயணித்திராத நிலவின் தொலைவுப்பகுதியை எட்டிய ஆர்டெமிஸ்-2 குழுவினரின் இந்தப் பயணத்தின் போது விண்கலம் பூமியிலிருந்து சுமார் 406,771 கிலோமீற்றர்ர் தூரம் சென்றது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த 1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு மனிதர்கள் அடங்கிய ஆர்டெமிஸ் 2 குழுவை, நிலவை நோக்கி கடந்த முதலாம் திகதி அனுப்பியது.

இதுவரை மனிதர்கள் எட்டாத தூரத்தை எட்டிய நால்வர் கொண்ட இக்குழுவினர், நிலவின் பின்பக்கம் சென்று மேற்பரப்பு புகைப்படத்தையும் வெளியிட்டனர்.

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…