இலங்கை

குடும்ப சண்டை கொலையாக மாறியது வெலிகமவில் மருமகன் பலி!

வெலிகம, பரணகடே பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (17) இரவு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் பரணகடே, வெலிகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார். 

உயிரிழந்த இளைஞன் தனது தாய், தந்தை, இரு சகோதரர்கள் மற்றும் தாயின் மூத்த சகோதரருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இதன்போது, கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கும் அவரது தாயின் மூத்த சகோதரருக்கும் (மாமா) இடையில் ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், குறித்த நபரால் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அதற்கமைய, குற்றத்துடன் தொடர்புடைய 58 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…