No products in the cart.
சாலையில் பரவிய கல் தூள் – பல வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்து
கல் தூள் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் பின்பக்க கதவு திறக்கப்பட்டு வீதியில் கல் தூள் கொட்டியதன் காரணமாக, கொழும்பிலிருந்து காலி நோக்கிச் செல்லும் வீதியின் களுத்துறை – வெட்டுமகடை பகுதியில் ஒரு வழிப்பாதை மூடப்பட்டுள்ளது.
குறித்த வீதியின் சுமார் 800 மீற்றர் தூரத்திற்கு இவ்வாறு கல் தூள் கொட்டியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கல் தூள் மீது பயணிப்பதற்கு முயற்சித்த நான்கு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக ‘அத தெரண’ செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று (23) அதிகாலை கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பயணித்த லொறி ஒன்றிலிருந்தே இவ்வாறு கல் தூள் கொட்டியுள்ளது. பாதுகாப்பற்ற முறையிலும் கவனக்குறைவாகவும் கல் தூள் கொண்டு சென்ற குறித்த லொறி, களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.














