உலகம்

பிரித்தானியாவின் உயிரியல் வங்கி தரவுகள் சீன இணையத்தளத்தில் விற்பனை

பிரித்தானியாவின் மிக முக்கியமான சுகாதாரத் தரவுக் கட்டமைப்பான ‘யூகே ‘உயிரியல் தரவு வங்கி” (UK Biobank) அமைப்பில் உள்ள சுமார் 5 இலட்சம் தன்னார்வலர்களின் மருத்துவத் தகவல்கள், சீனாவின் அலிபாபா (Alibaba) இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொழில்நுட்ப அமைச்சர் இயன் முர்ரே (Ian Murray) நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதில் பெயர்கள், முகவரிகள் அல்லது தொலைபேசி எண்கள் போன்ற தனிப்பட்ட விபரங்கள் இடம்பெறவில்லை என்றாலும், பாலினம், வயது, பிறந்த மாதம் மற்றும் ஆண்டு, வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் உயிரியல் மாதிரிகளின் முடிவுகள் போன்றவை விற்பனைப் பட்டியலில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தரவு கசிவு எந்தவொரு சைபர் தாக்குதல் (Cyber-attack) மூலமும் நடைபெறவில்லை என்றும், அங்கீகாரம் பெற்ற ஒரு ஆராய்ச்சி நிறுவனம் தரவுகளைத் தரவிறக்கம் செய்து, பின்னர் ஒப்பந்தத்தை மீறி அதனை இணையத்தில் விற்பனைக்கு வைத்திருப்பதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

தற்போது அந்தப் பட்டியல்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. புற்றுநோய், டிமென்ஷியா மற்றும் பார்கின்சன் போன்ற நோய்களுக்கான சிகிச்சைகளைக் கண்டறிய இந்தத் தரவுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தச் சம்பவம் ஒரு “பாரிய காட்டிக்கொடுப்பு” என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அணுகலை ‘உயிரியல் தரவு வங்கி’ இடைநிறுத்தியுள்ளதுடன், இது குறித்து விரிவான தடயவியல் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…