இலங்கை

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு – ஜூன் மாதம் வரை கையிருப்பு உறுதி

நாட்டுக்குத் தேவையான மசகு எண்ணெயை ஏற்றிய கப்பல் இன்று (26) இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே கூறுகையில், இன்று வருகை தரும் கப்பலில் 95,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் கொண்டுவரப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் மேலும் பல எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, 9,500 மெற்றிக் தொன் எரிபொருள் கொண்ட கப்பல் நாளை (27) நாட்டை வந்தடையவுள்ளது. மேலும் 36,000 மெற்றிக் தொன் எரிபொருள் ஏற்றிய மற்றொரு கப்பல் நாளை மறுதினம் (28) இலங்கையை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எரிபொருள் இறக்குமதிகள் மூலம் எதிர்வரும் ஜூன் மாத இறுதி வரை நாட்டின் தேசிய தேவைக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு நிலை உறுதிப்படுத்தப்படும் எனவும் பொதுமக்களுக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…