இலங்கை

சந்தேகத்துக்கிடமான சூழலில் ஒருவர் உயிரிழப்பு

பாதுக்க, அங்கம்பிட்டிய பகுதியில் வீதியோரக் கால்வாய் ஒன்றில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு, பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்தார். 

உயிரிழந்தவர் அங்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவராவார். 

இந்த மரணம் வீதி விபத்தினால் தான் நிகழ்ந்தது என்பதற்கான சான்றுகளோ அல்லது தகவல்களோ இதுவரை வெளியாகவில்லை. 

இதன் காரணமாக, இதனை ஒரு சந்தேகத்திற்கிடமான மரணமாகக் கருதி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக சடலம் தற்போது அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…