இலங்கை

எரிபொருள் விலை உயர்வு – உலகளாவிய பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான துறைமுக முற்றுகை பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என எச்சரித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஜூன் 2022க்குப் பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 120 டொலரைத் தாண்டியுள்ளது. 

ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருப்பது நீண்டகால மோதல்கள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் நிலவும் இந்த அரசியல் பதற்றங்கள் காரணமாக எண்ணெய் விலையில் ஏற்பட்டிருக்கும் திடீர் உயர்வு, உலக நாடுகளின் பொருளாதாரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…