இலங்கை

இலங்கையில் வருடாந்த மரணங்களில் 6 வீதம் ஆஸ்துமாவினால் ஏற்படுகிறது

இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும் மரணங்களில் சுமார் 6 சதவீதமானவை ஆஸ்துமா நோயினால் ஏற்படுவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

சரியான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என இலங்கை சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சுமன ஹந்தகல தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 5ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

“ஆஸ்துமா நோய் உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் ஒரு நோயாகும். உலகில் சுமார் 260 மில்லியன் மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தாக்கம் குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. உலகில் நாளொன்றுக்கு சுமார் 1000 பேர் இந்நோயினால் உயிரிழப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு தொற்றாத நோயாகும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும் மரணங்களில் சுமார் 6 சதவீதமானவை ஆஸ்துமா (Asthma) நோயினால் ஏற்படுவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

சரியான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என இலங்கை சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சுமன ஹந்தகல தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 5ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

“ஆஸ்துமா நோய் உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் ஒரு நோயாகும். உலகில் சுமார் 260 மில்லியன் மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தாக்கம் குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. உலகில் நாளொன்றுக்கு சுமார் 1000 பேர் இந்நோயினால் உயிரிழப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு தொற்றாத நோயாகும்.”

என்று அவர் குறிப்பிட்டார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…