இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவுறுத்தல்!

தற்போது பெய்து வரும் பலத்த மழைக்கு மத்தியில், அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் போது மின்சாரப் பலகைகளில் (Digital Boards) காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை வாசகங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை, சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

சீரற்ற வானிலை காரணமாக வாகனங்களின் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரச் செய்து பயணிக்குமாறும், குறிப்பாக மணிக்கு 60 கிலோமீட்டர் வேக எல்லையை பேணி வாகனங்களை செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன், இரு வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியைப் பேணுமாறும், திடீரென பிரேக் பயன்படுத்தும் போது வாகனம் ஆபத்தான முறையில் வழுக்கிச் செல்லக்கூடும் என்பதால் அது குறித்து விழிப்புடன் அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்துமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…