இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சி விசேட அறிவிப்பு

பௌத்த துறவிகளின் ஒழுக்காற்று நடவடிக்கை  தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளதாகவும், அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இறுதி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, நாட்டில் நிலவும் பாரம்பரியத்தின்படியே அனைத்தும் முன்னோக்கி கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்துடன் தொடர்புடைய சமூக ஊடகங்கள் மூலம் பௌத்த சாசனத்தையும், பௌத்த மதத்தையும் அழிப்பதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டமொன்று இன்று தாராளமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதில் சிவில் சமூகத்தின் ஒரு பகுதியினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று எப்போதும் பௌத்த துறவிகள் மற்றும் பௌத்த மக்களின் கருத்துக்கள் ஓரங்கட்டப்படும் நிலைமையே காணப்படுவதாக அந்த விசேட அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…