இலங்கை

தடல்ல பகுதியில் கோர பஸ் விபத்து

காலி – கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி இன்று (04) காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து ஏற்படும் போது பேருந்தில் சுமார் 20 பயணிகள் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, தடல்ல பகுதியில் வைத்து சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சுவருடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தினால் பேருந்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காலி பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…