உலகம்

பண மோசடியில் சிக்கிய புலம்பெயர் தமிழர்கள்!

சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் மோசடியாளர்களிடம் சிக்கிய பணத்தை இழந்துள்ளனர்.

செங்காளன் மாநிலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் சுமார் 1300 பிராங்குகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தமிழ் இளைஞன், புதிய ஐபோனை பரிசாக பெற்றுள்ளதாக குறிப்பிட்டு அனுப்பப்பட்ட குறுந்தகவலை பெற்றுள்ளார்.

இதனை உண்மையென நம்பிய இளைஞன், அதிலுள்ள லிங்கினை கிளிக் செய்துள்ளார்.

அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.

சில நிமிடங்களில் குறித்த வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெறப்படும் அறிவுறுத்தலை பெற்றுள்ளார்.

இதன்போது வங்கியில் நிலுவையில் இருந்த சுமார் 1300 பிராங்குகள் மோசடியாளர்களில் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இவ்வாறான மோசடிகளில் சிக்கிய பல தமிழர்கள் பணத்தை இழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…