No products in the cart.
இலங்கையில் பல வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!
நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் அவை தொடர்பில் கலந்துரையாடுவதற்கேனும் தற்போதைய சுகாதார அமைச்சர் தயாராக இல்லை என அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.