கனடா

ஈஸ்ட் யோர்க்கில் இளைஞருக்குக் கத்திக் குத்து: அருகில் இருந்த இருவர் கைது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஈஸ்ட் யோர்க் பகுதியில் உள்ள குட்வுட் பார்க் கோர்ட் (Goodwood Park Court) மற்றும் டாவ்ஸ் வீதி (Dawes Road) சந்திப்புப் பகுதியில், நபர் ஒருவர் கத்தியுடன் நடமாடுவதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கத்திக் குத்துக் காயங்களுடன் இருந்த ஒரு பதின்ம வயது (Teenage) இளைஞரைக் மீட்டனர். அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அதிர்ஷ்டவசமாக, அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வருவதற்குள் சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். எனினும், தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, சம்பவ இடத்திற்கு அருகிலேயே இரு சந்தேக நபர்களைக் காவல்துறையினர் குறுகிய நேரத்திற்குள் கைது செய்தனர்.

இந்தத் தாக்குதல் துல்லியமாக எந்த இடத்தில் நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் Mailroom பகுதியில் காவல்துறையினர் விசாரணை வளையத்தை (Police tape) அமைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஏதேனும் சாட்சிகள் இருந்தால் முன்வந்து தகவல் அளிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…