கனடா

கனடாவில் காட்டுத்தீயை அணைக்கச் சென்ற விமானம் விபத்து – 3 பேர் பலி!

கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான விமானம் ‘டர்போ கமாண்டர் 690’ ரகத்தைச் சேர்ந்ததாகும். இது காட்டுத்தீயை அணைக்கும் பணிகளை வான்வழியாகக் கண்காணித்து, வழிநடத்தும் ஒரு கட்டுப்பாட்டு மையமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

புதன்கிழமை இரவு, யெல்லோநைஃப் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஃபோர்ட் சிம்ப்சன் என்ற இடத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts