இலங்கை

கோர விபத்து – நபர் ஒருவர் உயிரிழப்பு

​ேஏ-9 (A9) வீதியின் மதவாச்சி, வஹமலு கொல்லேவ பகுதியில் இன்று (14) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மதவாச்சி, வஹமலு கொல்லேவ, பாடசாலைக்கு அருகில் வசிக்கும் 32 வயதுடைய நபர் ஆவார்.

ஹட்டன், கொட்டகலை பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறி ஒன்றும், மதவாச்சியிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நீதிமன்ற நடவடிக்கை ஒன்றிற்காக மதவாச்சிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்த முடியாமல் எதிர்த்திசைப் பாதைக்குள் நுழைந்தமையே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மதவாச்சி பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…