இலங்கை

அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2022 ஆம் ஆண்டு ‘ அரகலய’ போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில், சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார என்ற இளைஞரைக் கைது செய்து தடுத்து வைத்தமையின் ஊடாக, அக்காலப்பகுதியில் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட விசாரணைப் பிரிவின் அப்போதைய பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த ஆகியோர் அவரது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

அநுருத்த பண்டார என்ற குறித்த இளைஞனால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை விசாரணை செய்ததன் பின்னரே,உயர் நீதிமன்றம் இன்று (23) இந்த தீர்ப்பை வௌியிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…