கனடா

கனடாவில் சில உணவு வகைகள் குறித்து எச்சரிக்கை!

 ஒன்டாரியோவில் இணையவழியில் விற்பனை செய்யப்பட்ட ‘ஹோல் ஃபுட்ஸ் மார்க்கெட்’ நிறுவனத்தின் சில சாஸ்கள், குவாக்கமோல் மற்றும் பிற ஆயத்த உணவுகளில் ‘சால்மோனெல்லா’ பாக்டீரியா தொற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவை திரும்பப் பெறப்படுவதாக கனடாவின் உணவுத் ஆய்வு முகவரகம் அறிவித்துள்ளது.

மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார மிளகாய் மூலமாகவே இந்த பாக்டீரியா பரவியுள்ளது.

அமெரிக்காவில் ஏற்பட்ட நோய் பரவலுக்கும் இந்த மிளகாய்களே காரணம் எனக் கூறப்படும் நிலையில், அதன் தொடர்ச்சியாகவே கனடாவிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

கனடாவின் இராணுவத் தளத்தில் வெடிப்பு மற்றும் தீ விபத்து: பலர் உயிரிழப்பு!

கனடாவின் எட்மண்டனுக்குக் கிழக்கே அமைந்துள்ள கனடியப் படைகளின் வெயின்ரைட் தளத்தில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்து காரணமாக பல உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாகக் பெடரல் பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் மெக்குயின்டி தெரிவித்துள்ளார்.…