இலங்கை

பண்டித்தரிப்பு ஆலய சம்பவம்: கண் பாதிப்புக்கான காரணம் வெளியானது

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய நிபுணர் மலரவன் தனது மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார். 

சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை, நேற்று இரவு நிலவரப்படி 400-ஐ நெருங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்னதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 400 ஐ நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…