சினிமா

கட்சி பெயர் குறித்த கேள்விக்கு தனுஷ் கொடுத்த ரியாக்ஷன்!

சிறந்த நடிகர் மற்றும் இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், கட்சி பெயர் குறித்த கேள்விக்கு கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது. 

72 ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா கடந்த 22 ஆம் திகதி குஜராத்தில் நடைபெற்றது. இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் ‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது தனுஷூக்கு வழங்கப்பட்டது. 

அதேபோல, சிறந்த தமிழ் படமாக ‘ராயன்’ தேர்வு செய்யப்பட்ட நிலையில், சிறந்த இயக்குநருக்கான விருது என 2 விருதுகளை பெற்றார் தனுஷ். தேசிய விருது விழா முடிந்துவிட்டு, பங்கேற்று விட்டு தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் அகமதாபாத் வழியாக சென்னை விமான நிலையம் வந்தார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் தேசிய விருது பெற்றது குறித்து கேட்டதற்கு தேசிய விருது பெற்றது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் கட்சி பெயர் குறித்து கேட்டதற்கு சிரித்து விட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

What's your reaction?

Related Posts

அப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!

சினிமாஅப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!May 22, 2025 - 10:14 -0மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படத்தின் இயக்குநர் ஓம்…