சினிமா

கதறி கதறி அழுத பிரியங்கா

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, தனது இரண்டாவது திருமணத்திற்குப் பின் தனது கடந்த கால வாழ்க்கை மற்றும் புதிய கணவர் வசியுடனான பயணம் குறித்து உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார்.

2025 ஏப்ரல் 16 அன்று நடந்த இவரது திருமணம், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, பிரவீன் குமாரை 2016 இல் திருமணம் செய்த பிரியங்கா, 2022 இல் விவாகரத்து பெற்றார்.

இந்தப் பிரிவு, அவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. பிரியங்கா, தனது முதல் திருமணத்தில் நம்பிக்கை துரோகங்களால் ஏமாற்றமடைந்ததாகவும், நம்பி நம்பி ஏமாந்துட்டேன். அதுவே விவாகரத்திற்கு காரணமாக அமைந்ததாகவும் கதறினார்.

“விவாகரத்து ஒரு தீர்வாக இருந்தது. அதன்பின் தனியாக வாழ்ந்து, மீண்டும் திருமணம் செய்ய வேண்டாம் என முடிவெடுத்திருந்தேன். ஆனால், எனக்கு பிடித்தவாறு ஒரு வாழ்க்கையும், அன்பு செலுத்தும் ஒரு நபரும் அமைவார் என நம்பிக்கையுடன் காத்திருந்தேன்” என அவர் கூறினார்.

அப்படி ஒரு நபராக வசியை சந்தித்ததாகவும், அவருடனான அன்பு தூய்மையானது எனவும் பிரியங்கா உருக்கமாக தெரிவித்தார். வசியுடனான திருமணத்திற்கு பின், வயது வித்தியாசம் மற்றும் தோற்றம் குறித்து பலர் விமர்சித்தாலும், அதை பிரியங்கா பொருட்படுத்தவில்லை.

“வாழப்போவது நான். எங்களுக்குள் இருப்பது சுத்தமான அன்பு,” என திட்டவட்டமாக கூறினார். 42 வயதான வசி ஒரு டிஜே மற்றும் தொழிலதிபர், பிரியங்காவை விட 10 வயது மூத்தவர்.

இருப்பினும், இவர்களது அன்பு எல்லைகளை கடந்தது என ரசிகர்களும் பாராட்டுகின்றனர்.

What's your reaction?

Related Posts

உண்மை சம்பவமா?

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் செம ஹிட்டடித்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.3 ஆவது வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இப்படம் ரூ. 75 கோடி வசூலைத் தாண்டி செம கலெக்ஷன் செய்து வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை தொடர்ந்து சசிகுமார்…