இலங்கை

தேர்தல் கடமைக்குச் சென்ற பெண் உத்தியோகத்தர் திடீர் உயிரிழப்பு!

இலங்கையில் இன்று 06 ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுகின்றது.

கண்டி கண்ணொருவ கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் கடமைக்காகச் சென்ற கண்ணொருவ தாவர மரபணு வள மையத்தின் அபிவிருத்தி அதிகாரி  திடீர் சுகவீனம் காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிருஷாந்தி குமாரி தசநாயக்க 33 வயதுடையவர்  என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கலகெதர மினிகமுவவில் வசிப்பவர் ஆவர்.

திடீரென உடல்நிலையில் எற்பட்ட சுகவீனம், சிகிச்சைக்காக மாலை 5 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைக்குப் பின்னரே மரணத்திற்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…