உலகம்

பிரபல பாப் பாடகி நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அமெரிக்க பிரபல பாப் பாடகி நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கோபகபானா கடற்கரையில் அமெரிக்க பிரபல பாப் பாடகி லேடி காகா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கண்டுகளிப்பதற்காக அவரது ரசிகர்கள் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர்.

ஆடல், பாடல் என தங்களது மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர். இதற்கிடையே அந்த இசை நிகழ்ச்சிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதேசமயம் கையில் துப்பாக்கி வைத்திருந்த 2 வாலிபர்களை பொலிஸார் கைது செய்த நிலையில் அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…