இலங்கை

ருஹுனு பல்கலையில் பரவும் வைரஸ்

ருஹுனு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இணையவழி முறையில் முன்னெடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. வேகமாக பரவிவரும் வைரஸ் காய்ச்சல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு வார காலப்பகுதியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களில் சுமார் 30 பேர் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வைரஸ் காய்ச்சல் மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடைமுறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அமுலில் இருக்கும் என்றும் ருஹுனு பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…