No products in the cart.
நியூ பிரன்சுவிக் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: இருவர் மீது குற்றச்சாட்டு பதிவு
கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள பழங்குடிப் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டு பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.எல்சிபோக்டோக் குதியில் 21 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடையதாக, ஒட்டாவாவைச் சேர்ந்த 27 வயது நபர் மீது கடந்த சனிக்கிழமையன்று முதற்கட்ட கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்த 27 வயது நபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் நகருக்குச் செல்லும் விமானத்தில் ஏறத் தயாராக இருந்தபோது, வெள்ளிக்கிழமையன்று மாண்ட்ரீல்-ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.















