இலங்கை

கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் பெரும் பரபரப்பு!

மனஉளைச்சலுக்கு உள்ளாகி கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் கட்டிடத்தில் இருந்து விழுந்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அம்ஷியின் சாவுக்கு நீதி கேட்டு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முன்பாக நடத்தப்படும் மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது.

மாணவியை பாலியல் வன்புணர்ந்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரின் புகைப்படத்துக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் செருப்பால் அடித்தனர்.

அங்கு குழுமியிருந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள், “எங்கள் பிள்ளை” “எங்கள் பிள்ளை” என உணர்வு பூர்வமாக கோஷங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர்.

அதிபரே வெளியே வா”, “அதிபரை கைது செய்”, ”அதிபரை கைது செய்” “இறுதி வரை போராடுவோம்”,“கெட்டவனை கைது செய்”, “சங்கரனை கைது செய்”, “ நீதி வேண்டும்” என்று கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக கொழும்பில் உள்ள  டூப்ளிகேஷன் வீதி முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதியில் ஒருவித பதற்றம் நிலவியுள்ளது.

தொடர்ந்து பாடசாலைக்கு முன்னாள் உள்ள போக்குவரத்துப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டு மாற்று வழி போக்குவரத்துக்காக வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…