உலகம்

இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்திய ஆளில்லா விமானம் ஒன்றை பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

சிந்து – பஞ்சாப் எல்லைக்கு அருகிலுள்ள கோட்கி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தில் அப்பகுதியிலிருந்த ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் தளப் பதிவில், அந்நாட்டு இராணுவத்திற்கு நன்றி மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவினால் பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு, விரைவான மற்றும் தீர்க்கமான பதிலடியாக இந்த தாக்குதல் இருந்ததாகவும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…