இலங்கை

மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

கண்டி – கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்பில்மீகம பிரதேசத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து நேற்று 11 ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்தியுள்ள நிலையில் தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

விற்பனை நிலையத்தில் இருந்த 20 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…