இலங்கை

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல் முன்னெடுப்பு!

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 15 மாவட்டங்களில் 95 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 20,588 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,000க்கு அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேநேரம், மேல் மாகாணத்தில் சிக்குன்குன்யா நோய் தொற்றும் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…