இலங்கை

காத்தான்குடியில் 42பேர் அதிரடியாக கைது

மட்டக்கள்ப்பு காத்தான்குடியில் ஐஸ், கேரளா கஞ்சா,, சிகரெட் மற்றும் பெருமளவிலான கசிப்பு போதைப்பொருளுடன் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

57லீற்றர் கசிப்புடன் 25 பேரும் ஐஸ் போதை பொருளுடன் நால்வரும் கேரளா கஞ்சாவுடன் எட்டு பேரும் சிகரெட்டுடன் ஒருவரும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்ட நால்வருமாக 42 பேர் இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட கர்பலா, கல்லடி, புதிய காத்தான்குடி, தாழங்குடா, கிரான் குளம் உட்பட பல பிரதேசங்களில் பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…