No products in the cart.
போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் இன்றையதினம் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியின் வழிநடத்தலின் கீழ் இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 24 வயது மதிக்கத்தக்க மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கைதானவர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளௌம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.