சினிமா

தக் லைப் படம் செய்துள்ள வசூல்!

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஸ், அசோக் செல்வன் என முன்னணி பிரபலங்கள் நடிக்க வரும் ஜுன் 5 ஆம் திகதி வெளியாகப்போகும் திரைப்படம் தக் லைப்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளதால் எல்லா மொழிகளிலும் படத்திற்கான புரொமோஷன் வேகமாக நடந்து வருகிறது. படு மாஸா இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிய நேற்று (25) விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பைனல் நிகழ்ச்சியில் கமல் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு படத்தை புரொமோட் செய்தார்கள்.

படமும் ரிலீஸிற்கு தயாராகிவிட்டது, விரைவில் படத்தை மக்களும் கொண்டாட உள்ளனர். இன்னொரு பக்கம் படு சூடாக புரொமோஷன் வேலைகள் நடக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஓவர்சீஸ் புக்கிங் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதாவது இப்படம் ஓவர்சீஸ் ப்ரீ புக்கிங்கில் இதுவரை ரூ. 20 லட்சத்திற்கு மேல் வசூலித்துள்ளதாம்.

What's your reaction?

Related Posts

உண்மை சம்பவமா?

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் செம ஹிட்டடித்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.3 ஆவது வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இப்படம் ரூ. 75 கோடி வசூலைத் தாண்டி செம கலெக்ஷன் செய்து வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை தொடர்ந்து சசிகுமார்…