No products in the cart.
அதிகாரப்பூர்வமாக வந்த தகவல்
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் கங்குவா. சிவா இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் பல கலைஞர்கள் நடித்துள்ளனர்.
பெரிய எதிர்ப்பார்ப்பில் படம் வெளியானது ஆனால் அந்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை, அது சூர்யா ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தது என்றே கூறலாம். அப்படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் இந்த வருடம் வெளியான படம் தான் ரெட்ரோ.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க படத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மே 1 ஆம் திகதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து நாளுக்கு நாள் நிறைய செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் வரும் மே 31 ஆம் திகதி என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.