இலங்கை

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுப்பு

தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இன்று (29) கையளிக்க திட்டமிட்டுள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் தபால் தலைமையகத்திற்கு முன்னால் இடம்பெறும் போராட்டத்தைத் தொடர்ந்து, மகஜர் வழங்குவதற்காக சுகாதார அமைச்சுக்கு பேரணியாகச் செல்லவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

15 கோரிக்கைகளை முன்வைத்து, தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் நேற்று பிற்பகல் முதல் இரண்டு நாள் நாடளாவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை முன்னிறுத்தி, சிவில் விமான சேவை தொழில்முறை ஊழியர் சங்கம் நேற்று (28) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, சிவில் விமான சேவை தொழில்முறை ஊழியர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் மேலதிக நேர சேவைகளிலிருந்து விலகியுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக நேர கொடுப்பனவு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்று குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…