இலங்கை

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை, வேகட பிரதேசத்தில் உள்ள முச்சக்கரவண்டி உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யப்படும் நிலையமொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் குறித்த விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளானதோடு, அவர் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் இந்த வருடத்தில் மாத்திரம் 50 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…