No products in the cart.
கனடாவில் காட்டுத் தீயால் 25,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
கனடாவில் நேற்றையதினம்(01) ஏற்பட்ட காட்டுத்தீப்பரவலினால் அமெரிக்காவின் சில மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக 3மாகாணங்களில் உள்ள 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அவசர நிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கனடாவின் மானிடோபாவைச் சேர்ந்த சுமார் 17,000 பேரும் ஆல்பர்ட்டாவில் 1,300 பேரும் சஸ்காட்செவனில் சுமார் 8,000 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.