இலங்கை

வவுனியாவில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா, கல்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியிலிருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

22 வயது இளைஞரின் குறித்த சடலம் இன்று (08.06.2025) காலை மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞனை காணவில்லை என வீட்டார் தேடிய போது வீட்டின் முன்பாகவுள்ள மரத்தில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் மற்றும் கிராம சேவையாளருக்கு அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…