No products in the cart.
அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மீளவும் விளக்கமறியலில்
அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மோகன் கருணாரத்ன எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (11) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல மோசடிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்ற கைதியை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவித்த குற்றச்சாட்டின் பேரில் மேஹான் கருணாரத்ன கடந்த 8ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.