No products in the cart.
கண்டிக்கும் பேராதனைக்கும், இடையே விசேட பேருந்து சேவை
கண்டி மற்றும் பேராதனை ரயில் நிலையங்களுக்கு இடையில் பயணிகளை ஏற்றிச் செல்ல விசேட பேருந்து சேவை இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் தண்டவாளம் தாழிறங்கிய இடத்ததை ஆய்வு செய்வதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் குழு அங்கு சென்றுள்ளது.
இந்த தாழிறக்கம் காரணமாக பேராதனை மற்றும் கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ரயில் தண்டவாளத்திலேயே தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.
தண்டவாளத்தை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.