No products in the cart.
இஸ்ரேல் – ஈரான் போரால் எகிறிய கச்சா எண்ணெய் விலை!
மேற்கு ஆசிய பகுதியில் இஸ்ரேலும் ஈரானும் இடையே நிலவும் அரசியல் மற்றும் இராணுவ பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
இதனால் சந்தையில் நிலவும் அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் (Crude Oil) விலைகள் உயர்ந்துள்ளன.
Brent Crude எண்ணெய் விலை 5% வரை உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 75 டொலரைத் தாண்டியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இது சில வாரங்களுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வாகக் கருதப்படுகிறது.
இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் பெட்ரோல், டீசல் விலைகள் கூடும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் ஈரானை தாக்கியதாக கூறியதை அடுத்து, வெள்ளிக்கிழமை கச்சா எண்ணெய் விலை 5% க்கும் அதிகமாக உயர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலான அதிகபட்ச விலை உயர்வை பதிவு செய்துள்ளது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் அதிக இடையூறு ஏற்படும் என்ற கவலையும் இப்பொழுது எழுந்துள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 5.35% உயர்ந்து 75.65 டொலராகவும், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) கச்சா எண்ணெய் 5.86% உயர்ந்து 72.03 டொலராகவும் உயர்ந்தது.
இஸ்ரேலும் ஈரானும் பகுதிகளில் நேரடியாக அல்லது மூலமாக தாக்குதல் நடத்தும் நிலை உருவாகியிருப்பது சந்தை முதலீட்டாளர்களை அச்சமடைய செய்துள்ளது.
இந்த இரண்டு நாடுகளும் எண்ணெய் வழங்கும் முக்கிய பகுதிகளில் இருப்பதால், அங்கிருந்து எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) போன்ற முக்கிய எண்ணெய் கடத்தும் பாதைகளில் பதற்றம் உருவானால், அது உலகம் முழுவதும் எண்ணெய் விலையை பாதிக்கும்.
மோதல் மேலும் தீவிரமாகுமானால், எண்ணெய் விலை $80க்கும் மேல் செல்லும் வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கின்றனர்.
ஆனால் இது ஒரு தற்காலிக அச்சத்தால் ஏற்படும் உயர்வாக இருக்கலாம் என்றும், நிலைமை சமனில் வந்தால் விலை மீண்டும் குறையும் என்றும் சிலர் கருதுகின்றனர்.