இலங்கை

நுரைச்சோலை மின் பிறப்பாக்கி நிறுத்தம் – மின்சார சபை அறிவிப்பு

இன்று (13) நள்ளிரவு முதல் நுரைச்சோலை 3வது மின் பிறப்பாக்கியின் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த பராமரிப்பு பணிகள் 25 நாட்களுக்கு நடைபெறும் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.

இதனால், தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும்.

எனினும், 2 மின் பிறப்பாக்கிகள் செயல்பாட்டில் உள்ளதால் மின்சக்தி விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.

3வது மின் பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட பின்னர், நுரைச்சோலை மின்நிலையத்தின் 1வது மின் பிறப்பாக்கி பராமரிப்பு பணிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.

இதேவேளை, கடந்த ஒன்றரை மாத காலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம், அடுத்த சில நாட்களில் மின்சக்தி உற்பத்திக்காக மீண்டும் இணைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் தேசிய மின் கட்டமைப்பிற்கு 165 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படும்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…