No products in the cart.
கனடாவில் வரி மோசடியில் ஈடுபட்டவருக்கு சிறைத்தண்டனை
கனடாவில் வரி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அல்பேர்டா மாகாணத்தில் உள்ள ப்ரூக்ஸ் நகரைச் சேர்ந்த லெஸ்லி சாண்ட் என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பெருந்தொற்று காலத்தில் பல்வேறு அரசு நிவாரணங்களை மோசடியாக பெற்றதற்கும், வருமான வரி செலுத்தாததற்கும் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 798,709.02 டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
“Flyte Deck Corporation” என்ற ட்ரோன் விமான சேவை மற்றும் 3D அச்சுப்பதிப்புத் துறையை முன்வைத்து, சந்த் இந்நிறுவனத்தின் ஒரே பங்குதாரராகவும், கையொப்ப அதிகாரியாகவும் இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
















