No products in the cart.
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்
அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட்டின் 3 ஆவது சீசன் நடந்து வருகிறது.
இதன் லீக் போட்டி ஒன்றில் சான் பிரான்சிஸ்கோ அணியும், வாஷிங்டன் அணியும் மோதின. முதலில் ஆடிய சான் பிராசின்ஸ்கோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 269 ஓட்டங்களை குவித்தது.
அடுத்து ஆடிய வாஷிங்டன் அணி 146 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் சான் பிரான்சிஸ்கோ அணி 123 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ அணியின் நியூசிலாந்து வீரர் பின் ஆலன் 51 பந்தில், 19 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 151 ஓட்டங்களை குவித்து வெற்றிக்கு வழி வகுத்தார்.
இந்நிலையில், டி 20 அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் பின் ஆலன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல், எஸ்டோனியாவின் சாஹில் சவுகான் ஆகியோர் தலா 18 சிக்சர் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர்.