இலங்கை

உப்பிற்கான புதிய விலைகள் அறிவிப்பு!

நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சந்தையில் உப்பின் விலையை குறைத்து, அதிகபட்ச சில்லறை விலையில் உப்பை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அண்மையில் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து, போதுமான அளவு உப்பு கையிருப்பில் உள்ளது என்றும், இறக்குமதி செய்யப்பட்ட உப்பை உடனடியாக விற்பனை செய்ய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கல் உப்பு 1 கிலோ ரூ. 180

தூள் உப்பு 1 கிலோ ரூ. 240

தூள் உப்பு 400 கிராம் ரூ. 120

மேற்படி விலையில் பொதி செய்யப்பட்ட உப்பை நாடு முழுவதும் விநியோகிக்க பல நாட்கள் ஆகலாம் என்றும், அதன் பிறகு நுகர்வோர் நாடு முழுவதும் மேற்படி விலையில் பொதி செய்யப்பட்ட உப்பை வாங்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…